Header Ads Widget

Responsive Advertisement

என் தேவைகளை காட்டிலும்




என் தேவைகளை காட்டிலும்,

என் தேவன பெரியவரே

என் சூழ்நிலையை பார்க்கிலும்,

என் ரட்சகர் பெரியவரே-2

ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன்

ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம


தண்ணீரை ரசமாக மாற்றி,

என் வெறுமையை நிறைவாக்கினீரே

வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்,

என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே


எதிரான சூழ்ச்சியை உடைத்தே,

என் எதிரியை மேற்கொண்டீரே

நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்,

என் தலை உயர்த்தி வைத்தீரே


கோணலை நேராக மாற்றி,

பள்ளத்தை மேடாக்கினீரே

திறக்காத கதவுகள் எல்லாம்,

உம் கிருபையால் திறந்திட்டதே

Post a Comment

0 Comments