எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமமே
சகல முழங்காலும் உமக்கு முன்பாக
முடங்கிடும் நாமமே
புகழும் கனமும் ஸ்தோத்திரம் உமக்கன்றோ
புகழும் கனமும் ஸ்தோத்திரம் என்றென்றுமே
நீர் ஒருவரே பெரியவர்
கனத்துக்குப் பாத்திரரே
நீர் ஒருவரே பரிசுத்தர்
மகிமைக்குப் பாத்திரரே
உம்மையல்லாமல் வேறே தெய்வம்
இப்பூவில் காணவில்லை
இயேசுவல்லாமல் வேறே நாமம்
இனியும் காண்பதில்லை


0 Comments